“படம் பட்டாசா இருக்கு.. ஜெயிச்சிட்ட அட்லீ”.. ஜவான் படம் குறித்த ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Author: Vignesh
7 September 2023, 11:16 am

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் படம் இன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தின் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி ஜவான் படத்தின் முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கூஸ்பம் தான் என்றும், வேற லெவலில் திரைக்கதை இருப்பதாகவும், அட்லி படத்தின் திரைக்கதையில் மிரட்டி இருக்கிறார். ஷாருக்கான் நடிப்பு பாட்டை கிளப்புகிறது. ரசிகர்கள் 4/ 5 என்ற ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரின் நடிப்பு இந்த படத்தில் அருமையாக இருப்பதாகவும், அனிருத் பின்னணி இசையில் வெறித்தனமாக மிரட்டி இருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் அனைவருடைய ஒரே கருத்து படம் பிளாக்பஸ்டர் என்பதுதான். இதன் மூலம் அட்லி பாலிவுட் திரையிலும் வெற்றி இயக்குனராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீயை ஷாருக்கான் ரசிகர்கள் ஏகப்பட்ட வீடியோ மீம்களை பதிவிட்டு ஜெயிச்சிட்ட அட்லீ என்றும் படம் பிளாக்பஸ்டர் என்றும் அடுத்த 1000 கோடி ரெடி என தெறிக்க விட்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!