மளமளன்னு கொட்டிப்போச்சு… ரஜினிகாந்தின் தலைமுடி பறிபோன ரகசியம்-கலாய்த்த பயில்வான் ரங்கநாதன்!

Author: Shree
8 September 2023, 10:06 am

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.

உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியை வம்பிற்கு இழுத்து பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். ஆம், ரஜினியிடம் ஒருமுறை தலைமுடி உதிர்ந்திருப்பதை குறித்து கேட்டதற்கு, நான் நிறைய ஹேர் டை யூஸ் பண்ணுவேன். எனக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிட்டது. அதனால் பல விதமான ஹேர் டை அடித்துக்கொண்டதால் முடி மளமளன்னு கொட்டிப்போச்சு என அவர் கூறியதாக பயில்வான் கலாய்க்கும் விதத்தில் கிண்டலாக பேசியுள்ளார்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…