என்ன ராஜமாதா இது? பப்பில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்..!

Author: Vignesh
15 September 2023, 12:26 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - update news 360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ramya krishnan - updatenews360

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து அமோக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். இதனிடையே, ரம்யா தனது 53வது பிறந்தநாளை ராதிகாவுடன் பப்பில் கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?