சினிமாவை மிஞ்சிய சம்பவம்… காவலர்களை தாக்கிய கைதிகள் ; கோவை மத்திய சிறையில் பரபரப்பு..!!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 1:06 pm

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இன்று கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மத்திய சிறை வளாகத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட சிறை கைதிகள், கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாகவும், குண்டு வெடிப்பு தண்டனை கைதிகளாகவும், விசாரணை கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவுகளாக நேரம் ஒதுக்கப்பட்டு காலை மதியம் இரவு உணவுகள் வழங்கப்படுகின்றன.

இன்று காலை உணவு வழங்கும்போது விசாரணை செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடன் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக, 7 விசாரணை கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக கோவை மத்திய சிறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்த 4 போலீசாருக்கு சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாகவும், உடலில் வேறு எந்தெந்த பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது பரிசோதனையின் மூலம் தெரியவரும், என்று கூறியுள்ளார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?