ஓரங்கட்டிய அஜித், ஜோதிகா.. ஓகே சொன்ன நடிகையை பாடாய்படுத்தி ஓடவைத்த S J சூர்யா..!

Author: Vignesh
27 September 2023, 10:00 am

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

s j surya - updatenews360

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.

சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும் அப்படி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. இதனிடையே, எஸ் ஜே சூர்யா சிம்ரன் நடிப்பில் வெளியான நியூ படம் முன்னதாக அஜித் மற்றும் ஜோதிகா தான் நடிக்க இருந்தார்களாம். ஆனால், சில காரணங்களால் நடிக்காமல் போக சிம்ரன் அவருடன் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யாவை பொருத்தரை நடிப்பு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பூர்த்தி செய்ய வேண்டும் அப்படி நடிக்காத நடிகர் நடிகைகளிடம் கோபத்தை காட்டுவாராம்.

அப்படி நியூ படத்தில் சிம்ரன் ஒரு சீனில் நடித்த போது அவருக்கு நடிப்பு வராமல் பல டேக்களை வாங்கி இருக்கிறார் சிம்ரம். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற எஸ் ஜே சூர்யா, சிம்ரன் மீது செல்போனை தூக்கி எறிந்துள்ளார். இதனால், தான் அசிங்கப்பட்டதாக நினைத்து சிம்ரன் ஷூட்டிங்கில் இருந்து வெளியேறி விட்டார். உதவி இயக்குனர்கள் வந்து சமாதானம் செய்த பின் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் சிம்ரன்.

new-updatenews360
  • ss rajamouli shared about sharing unverified war photos and videos பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி