வனிதா மகளுக்கு குவியப்போகும் பேராதரவு… முதல் நாமினேஷனிலே அதிக ஓட்டு வாங்கிய ஜோவிகா!

Author: Shree
2 October 2023, 7:43 pm

பிக்பாஸ் சீசன் 7 படு ஜோராக துவங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வனிதா மகள் ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதல் மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ஜோவிகா அதிக ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டு வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் மற்ற வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் சொல்ல அதில் அதிகபட்சமாக 4 பேர் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை தான் நாமினேட் செய்து இருந்தனர்.

அவருடன் யுகேந்திரனுக்கு 3 ஓட்டு மற்றும் பிரதீப்புக்கு 3 ஓட்டு விழுந்ததால் அவர்களும் நாமினேட் ஆகி உள்ளனர். மேலும் பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா, ரவீனா உள்ளிட்டோர் அடங்கும். இது ஒரு விதத்தில் ஜோவிகாவுக்கு ப்ளஸ் பாயிண்ட் என்றே கூறலாம், சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் மத்தியில் யார் அதிகம் கார்னர் செய்யப்படுகிறாரோ அவருக்கு தான் அதிகம் பப்ளிசிட்டி கிடைக்கும். எனவே அதன்மூலம் அந்த நபரின் நாள் ஒன்றின் சம்பளமும் அதிகரிக்கும். இதனால் ஜோவிகா சரியான பாதையில் தான் செல்கிறார் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!