கொட்டும் பணமழை… இர்ஃபானின் புதிய ஸ்டுடியோவை துவங்கி வைத்த நடிகர் கார்த்தி!

Author: Shree
23 October 2023, 6:37 pm

கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் நடத்தி பெரிய ஸ்டார் நடிகர்கள் ரேஞ்சுக்கு சாதாரண மக்கள் கூட பிரபலமாகிவிட்டனர். அந்தவகையில் பிரபல யூடியூப்பரான இர்ஃபான் சாப்பிட்டு vlogger மற்றும் ரிவ்யூ செய்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் பல்வேறு திரை நட்சத்திரங்களை வைத்து food review கொடுப்பார். இவரது யூடியூப் சேனலை 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் யூடியூப் வீடியோவில் உள்ளூர் உணவு முதல் வெளிநாட்டு உணவுகள் வரை பொளந்து காட்டுவார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படி பார்த்த சீக்கிரத்தில் கிடுகிடுவென வளர்ந்து வரும் இர்ஃபான் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் தற்போது மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை துவங்கியுள்ளார். அதனை நடிகர் கார்த்தி திறந்து வைத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக எல்லோரும் ஆச்சர்யத்துடன் பேசி வருகிறார்கள்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?