உலக பக்கவாத தினம்… பிரசாந்த் மருத்துவமனை சார்பில் சென்னையில் 4 நாள் பக்கவாத விழிப்புணர்வு பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 1:47 pm

சென்னை, 27th அக்டோபர் 2023: சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பிரசாந்த் மருத்துவமனை மக்கள் நலன் கருதி பல்வேறு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அவ்வப்போது நடத்தி வருகிறது.

அந்த வகையில் உலக பக்கவாத தினத்தையொட்டி பக்கவாத நோய் வராமல் தடுப்பது குறித்த 4 நாள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை இம்மருத்துவமனை நடத்தியது.

உலக பக்கவாத தினம் அக்டோபர் 29–ந்தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், ‘நாம் ஒன்றிணைந்தால் பக்கவாதத்தைவிட வலிமைமிக்கவர்கள்’ என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மாதவரம், புழல், அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பக்கவாதம் குறித்த பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டனர். பல்வேறு விதமான பக்கவாத நோய்கள் வராமல் தடுப்பதற்கும், வந்தவர்கள் அதை திறம்பட கையாள்வதற்கும் பிரசாந்த் மருத்துவமனைnபுதுமையான முறைகள் மற்றும் அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உறுதி எடுத்துள்ளனர்.

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் பக்கவாதம் வராமல் தடுப்பது, ஆரம்ப நிலையில் அதை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இதில் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்று பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து பிரசாந்த் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், “உலக பக்கவாதம் தினத்தில் இந்த மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

பக்கவாதத்தால் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழக்கிறார்கள். பக்கவாதம் வந்தவர்கள் அதை முறையாக கையாண்டு அதற்கு தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும். பக்கவாதம் வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வழக்கமான மற்றும் அவ்வப்போது சோதனைகள், சரியான உணவு பழக்கவழக்கம், ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடி மருத்துவ சிகிச்சைகளை பெறுவது ஆகியவை குறித்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.


திடீரென பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க எங்கள் மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் இருப்பதோடு திறமைமிக்க மருத்துவர்களும் இருக்கிறார்கள். எங்கள் குழுவினர் இந்த பிரச்சாரத்தின் மூலம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதோடு, அது ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் என்ன மற்றும் அதை எப்படி கையாள்வது மற்றும் அது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துக்கூறினார்கள் என்று தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!