அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… வார இறுதியில் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 10:35 am

வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை கடந்து விற்பனை… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து  ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,669ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,352 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…