‘கொலை பண்ணிடுவேன்-னு மிரட்டுறாங்க’… திமுகவினர் மீதே திமுக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 4:56 pm

தனது கட்சியை சேர்ந்தவர்களே தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுவதாக திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக ஆலங்குளம் பகுதி திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.

தனது பகுதியை சேர்ந்த சக திமுக நிர்வாகிகளால் தான் மிரட்டப்படுவதாகவும், தன்னை அவர்கள் கொன்று விடுவதாகவும் கூறி, தனது வீட்டிற்கு வந்து தன்னை அச்சுறுத்தி சென்றதாகவும் அவர் புகார் கூறினார்.

மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டால், அவதூறாக தங்கள் மீது தலைவர் தமிழ்ச்செல்வி குற்றச்சாட்டு தெரிவிப்பதாக எதிர்தரப்பினர் கூறியுள்ளனர்.

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!