தொடர் தோல்வி… முன்னாள் வீரர்கள் விமர்சனம் : கனத்த இதயத்துடன் பாபர் அசாம் வெளியிட்ட அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 8:21 pm

தொடர் தோல்வி… முன்னாள் வீரர்கள் விமர்சனம் : கனத்த இதயத்துடன் பாபர் அசாம் வெளியிட்ட அறிவிப்பு!!!

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா நடத்திய உலகக் கோப்பையில் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தனர். இதனால் உலகக் கோப்பையின் குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது.

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் மிகவும் மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பாபர் அசாமை பல மூத்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர்.

இந்நிலையில், பாபர் அசாம் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் பதவியேற்றார். கடந்த நான்கு ஆண்டுகள் மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானின் வழக்கமான கேப்டனாக இருந்தார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்த தகவலை பாபர் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் “2019 இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து பாகிஸ்தான் கேப்டனாக எனக்கு அழைப்பு வந்த தருணம் எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. இன்று நான் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு வீரராக மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானுக்காக தொடர்ந்து விளையாடுவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பிற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்-1 இடத்தை எட்டியது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும். இந்த பயணத்தின் போது அசைக்க முடியாத ஆதரவு அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!