வாரத் தொடக்கத்திலேயே அபாரம் ; முதல் நாளிலேயே எகிறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
20 November 2023, 11:35 am

வாரத் தொடக்கத்திலேயே அபாரம் ; முதல் நாளிலேயே எகிறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த வாரம் சரிவுடன் முடிந்த தங்கத்தின் விலை, இன்றைய வாரத்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640 க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.5,705-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.20) எந்த மாற்றமும் இன்றி 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,000-க்கு விற்பனை ஆகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…