முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு… நீதிமன்றத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் : பரபரப்பு உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 1:24 pm

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு… நீதிமன்றத்தில் ஆஜரான சி.வி.சண்முகம் : பரபரப்பு உத்தரவு!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள நாட்டாரமங்கலம் மற்றும் ஆரோவில் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி(10-3-2023) தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீதும் தமிழக அரசு மீதும் அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மீது தொடரப்பட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டம் உரிமை நீதிமன்றத்தில் நீதிபதி பொறுப்பு வெங்கடேசன் தலைமையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆஜராகினார்.

பின்னர் வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 21ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?