டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு தேதி மாற்றம்.. புயல் காரணமாக ஒத்திவைப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 7:33 pm

டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு தேதி மாற்றம்.. புயல் காரணமாக ஒத்திவைப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என 3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி நேர்முகத்தேர்வு தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு முன்னதாக முடிவடைந்து கடந்த நவம்பர் மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போல் நாளை டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில் நேர்முக தேர்வானது சென்னை பாரிமுனை டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்தது.

இந்த நேர்முக தேர்வு தேதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாளை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முக தேர்வு டிசம்பர் 6ஆம் தேதிக்கும், டிசம்பர் 6ஆம் தேதி புதன் கிழமை நடைபெற இருந்த தேர்தல் வியாழன் அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!