சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்… பாதுகாப்பாக மீட்ட மாநகராட்சி குழு..!

Author: Vignesh
5 December 2023, 5:10 pm

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.

vishnu-vishal-updatenews360

இந்நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தனது வீடு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று கூறி கூரை மீது நின்று உதவி கேட்டு உள்ளார். மேலும், காரைப்பாக்கம் பகுதியில் தண்ணீர் கூடிக் கொண்டே போகுது நான் உதவி கேட்டு இருக்கிறேன் என அவர் தெரிவித்து இருந்தார்.

காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மாட்டிக்கொண்டதை எக்ஸ் தளத்தில் பதிவு செய்த நிலையில், அவர் தண்ணீரில் சிக்கியது மாநகராட்சிக்கு உடனே தெரிய வர அவருக்கு உதவி செய்துள்ளனர். மேலும், விஷ்ணுவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் காப்பாற்றப்பட்டுள்ளார். எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என பதிவு செய்த விஷ்ணு உடனே எங்களை மாநகராட்சி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி விட்டார்கள் என மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…