பாஜகவுக்கு எதிராக நன்கொடை அளிக்கும் பிரபல நடிகை.. காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாக திட்டம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 9:00 pm

பாஜகவுக்கு எதிரான நன்கொடை அளிக்கும் பிரபல நடிகை.. காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாக திட்டம்?!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாரான கேசி வேணுகோபால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் விதமாக தேசத்துக்காக நன்கொடை தாருங்கள் என்ற திட்டம் நாளை மறுதினம் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.

இதில் 138, 1380, 13800 என தங்களால் முடிந்த நிதியை மக்கள் அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், 1380 ரூபாய் நன்கொடை செலுத்தி, அதற்கான ரசீதையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை.

எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. சவாரி செய்கிறது.

சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பா.ஜ.க.வின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பா.ஜ.க. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?