கண்ணை மூடு ஸ்பெஷல் கிஃப்ட் தரேன்: மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி கொடுத்த சர்ப்ரைஸ்..!

Author: Vignesh
26 December 2023, 10:27 am

தமிழ் சினிமாவில் மிகக்குறுகிய காலத்திலேயே பரவலான மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடியனாக பார்க்கப்படுபவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ‘டாக்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி விஜய் நடிப்பில் உருவாகிய ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

redin kingsley

கடந்த சில நாட்களாக ரெடின் கிங்ஸ்லி பற்றிய செய்தி தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து இந்த புதுமண ஜோடி தங்களின் தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது பார்வையும் ஈர்த்துள்ளனர்.

redin kingsley

இந்நிலையில், சமீபத்தில் கூட கணவரின் பிறந்தநாளுக்கு சங்கீதா இரவு பார்ட்டி ஒன்றை கொடுத்திருந்தார். நேற்று, கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் காதல் மனைவி சங்கீதாவுக்கு ரெடின் கிங்ஸ்லி பரிசு வழங்கி வெளியில் கூட்டி சென்றுள்ளார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சங்கீதா தற்போது, இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?