நல்ல நாள் அதுவுமா இப்படியா…? புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சண்டை… மாறி மாறி அடித்துக்கொண்ட வாலிபர்கள்!!

Author: Babu Lakshmanan
1 January 2024, 9:30 pm

கோவை ; கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எழுந்த சண்டையால் மாறி மாறி வாலிபர்கள் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த கொண்டாட்டத்தில் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. இந்த ஆண்டு வாலாங்குளம் பகுதியில் வாலிபர்கள் குவிந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வாலிபர்கள் அடித்துக்கொண்டனர்.

ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். அதில் ஒருவரை கீழே தள்ளிவிட்டு மூக்கில் உதைத்தனர். இதனால் மூக்கு உடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்த. இதில் சண்டையிட்டவகள் விவரம், ஏன் சண்டையிட்டார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.

தற்போது அந்த இளைஞர்கள் சண்டையிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. புத்தாண்டு நல்ல நாள் அதுவுமா..? இப்படியா அடித்துக் கொள்வது என்று அங்கிருந்தவர்கள் முனுமுனுத்தபடி சென்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?