திமுக கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.. தண்ணீர் லாரியை மறித்து ஆர்ப்பாட்டம்!!

Author: Babu Lakshmanan
1 January 2024, 10:02 pm

கோவில்பட்டி சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி தண்ணி லாரியை மறித்து திமுக கவுன்சிலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 14வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி தண்ணி லாரியை மறித்து திமுக கவுன்சிலர் தவமணியை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 36 வார்டுகளுக்கும் தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 26 வார்டுகளுக்கு சாலை பணிகள் முடிந்துவிட்டது. தற்போது ஆட்சியாளர்கள் 10 வார்டுகளுக்கு சாலை அமைக்கும் அனுமதியை ரத்து செய்தனர்.

இதனால் தற்போது கோவில்பட்டி பகுதி கனமழை பெய்த காரணத்தினால் சாலைகள் மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் கன மழை காரணத்தினால் சீவலப்பேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவில்பட்டியில் சீவலப்பேரி குடிநீர் பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி சார்பில் தண்ணி லாரி மூலமாக குடிநீர் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இதில் இன்று 14வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தண்ணி லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் தெரிந்து வந்த திமுக கவுன்சிலர் தவமணியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?