சரியான பதிலடி கொடுத்த இந்திய அணி… 55 ரன்னில் சுருண்டது தென்னாப்ரிக்கா : மிரட்டிய சிராஜின் வேகம்..!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 3:52 pm

2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை 55 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய தென்னாப்ரிக்கா அணிக்கு இந்திய பவுலர்கள் சிம்ம சொற்பமனமாக திகழ்ந்தனர். சிராஜ், பும்ரா ஆகியோர் வீசிய ஓவர்களில் எல்லாம் விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், தென்னாப்ரிக்கா அணி தாக்குபிடிக்காமல் முடியாமல் திணறியது.

அந்த அணியின் மார்க்ரம் (2), எல்கர் (4), ஜோர்ஷி (2), ஸ்டப்ஸ் (3), பெட்டிங்காம் (12), வெரேயின் (15), யான்சென் (0), மகாராஜ் (3), ரபாடா (5), பர்கர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். பெட்டிங்காம் , வெரேயின் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிராஜ் 6 விக்கெட்டும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்,

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?