படுக்கையறை, அந்தரங்கக் காட்சிகளில் அந்த உணர்வு அதிகமா இருக்கும்.. தமன்னா ஓபன் டாக்..!

Author: Vignesh
17 January 2024, 10:25 am

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

Tamannaah -updatenews360

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார். அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் படு பிசியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Tamannaah -updatenews360

நடிகை தமன்னா படுக்கை அறை காட்சியில் நடிப்பது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், அவர் அந்தரங்க காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. அதுமட்டுமின்றி, நடிகைகளை விடவும் நடிகர்கள்தான் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது ரொம்பவே பதற்றமாக மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நடிகைகள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படுவார்கள் என்று தமன்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?