Minimum பட்ஜெட் மியூசிக் டைரக்டர் தான்… ஆனால், எத்தனை கோடி சொத்து தெரியுமா?

Author: Rajesh
24 January 2024, 10:05 am

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான டி இமான் 2000 காலகட்டத்தில் இருந்தே பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலம் ஆகினார். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் வித்யாசமான கிராமத்து குத்து பாடல்கள் தான் இவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஹீரோவாக உதவியதும் அந்த பாடல்கள் தான்.

அதுமட்டும் அல்லாமல் தொடரி, வெள்ளக்கார துரை, கும்கி, மனம் கொத்திப் பறவை, மைனா உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனிடையே இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவையே உலுக்கி எடுத்தது. இந்த விவகாரத்தினால் சிவகார்த்திகேயன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை நிலைகுலைந்துப்போனது.

Minimum பட்ஜெட்டில் திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுக்கும் இமானின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்துக்கு ஒன்று முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்கும் இமான் ஆண்டுக்கு 7 முதல் 9 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். ஆக இமானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?