கேப்டனுக்கு பெரும் கவுரவம்.. விஜயகாந்துக்கு உயரிய விருதை அறிவித்த மத்திய அரசு..!

Author: Vignesh
26 January 2024, 8:33 am

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அவர்களை தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என லட்சக்கணக்கானோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் அவர் விருப்பத்தின் படியே மக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

vijayakanth

இந்நிலையில், இன்று விஜயகாந்த்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்து இருக்கிறது. இறந்தபின் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரை தொடர்ந்த நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜெயந்திமாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?