உணவு ஆர்டர் செய்து விட்டு ஊழியரை அழைத்துச் சென்று செல்போன் பறிப்பு… ஆண்பாவம் பட பாணியில் கைவரிசை காட்டிய நபர்..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 1:08 pm

சென்னை ; ஓட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு பணம் தருவதாக ஊழியர்களை அழைத்து சென்று நூதன முறையில் செல்போனை பறித்து சென்ற பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர்.

ஆண்பாவம் படத்தில் கடைக்கு செல்லும் நபர் ஆயிரம் லட்டு வேண்டும் என ஆர்டர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள துணி கடைக்கு சென்று ஆயிரம் ரூபாய்க்கு துணியை எடுத்து கொண்டு, நண்பர் ஒருவர் பணம் கொடுக்க வேண்டும், கடை பையனை அனுப்பினால் கொடுத்து விடுவதாக கூறி, வேலை செய்யும் ஊழியரை அழைத்துக் கொண்டு செல்வார்.

நேராக இனிப்பு கடைக்கு சென்று, ‘தம்பி அண்ணன் ஆயிரம் கொடுப்பாரு எண்ணி வாங்கிட்டு போ’ என கூறி அங்கிருந்து அந்த கில்லாடி நபர் செல்லும் நிலையில், ஆயிரம் லட்டை எடுத்து வந்து கொடுத்த போது லட்டுக்கு துட்டு, துட்டுக்கு லட்டு என கூறுவார்கள். அப்போதுதான் அந்த நபர் இருவரையும் ஏமாற்றிவிட்டு சென்றது தெரியவரும். அது போன்ற சம்பவம் ராமாபுரம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் முல்லை நகர் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த நபர் ஐந்து சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு அருகில் வசித்து வருவதாகவும். பணம் கொண்டு வரவில்லை ஊழியரை அனுப்பினால் பணத்தை கொடுத்து அனுப்புவதாக கூறிய நிலையில். கடை உரிமையாளரும் ஊழியரை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், அந்த நபரின் செல்போனை வாங்கி வீடு மேலே தான் உள்ளது, மேலே வரும் நபரிடம் பணம் கொடுத்து அனுப்பு என பேசுவது போல் பாவலா காட்டியதாகவும், பின் அந்த வாலிபர் மேலே சென்று பார்த்தபோது, அதுபோல் யாருமில்லை என்றும், கீழே வந்து பார்த்தால் அந்த நம்பரும், செல்போனை எடுத்துச் சென்றதாகவும், அப்போதுதான் தங்களை ஏமாற்றியது தெரிய வந்ததாக ராமாபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் ராமாபுரம் போலீசார் கண்காணிப்பு கேமரா மற்றும் அந்த நபர் செல்போன் எண்களை வைத்து விசாரித்தபோது, இந்த மோசடியில் ஈடுபட்டது கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த நசீர் கான் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த அந்த நபரை ராமாபுரம் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் வாகனத்தின் எண்கள் அந்த நபர் பேசிய செல்போன் எண்களை வைத்து விசாரித்த போது, அவருக்கு அறிமுகமான நபர் என்பது தெரிய வந்தது. மேலும், ஆரம்ப நாட்களில் வாசனை திரவியம் தொழில் செய்து வந்தவர், அதில் போதிய வருமானம் இல்லாத நிலையில், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

வளசரவாக்கம், ராமாபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இதேபோல், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று உணவுகளை வாங்கிக் கொண்டு அழைத்துச் சென்று செல்போன்களை பறித்துச் சென்றதும் விசாரணையில் அம்பலமானது.

ஆண் குழந்தை மிகவும் பிடிக்கும் என்பதால் திருமணம் ஆன நாள் முதல் ஆறு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், மேலும் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரிடம் இருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பட வானில் உணவையும் வாங்கிக் கொண்டு ஊழியர் கவனத்தை திசை திருப்பி செல்போனையும் என்ற வழக்கில் நபர் முதல் முறையாக கைது செய்யப்பட்ட சம்பவமும், நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!