ஆத்விக் ஸ்கூலில் Football விளையாடும் அஜித்… குழந்தையாகவே மாறிய தருணம்!

Author: Rajesh
6 February 2024, 12:19 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அவர் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகிவிடும் அந்தவகையில் தற்போது அஜித்தின் மகன் ஆத்விக் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் நடிகர் அஜித் கலந்துக்கொண்டு குழந்தைகளோடு Football விளையாடியிருக்கிறார்.

கால்பந்து விளையாட்டின் GOAT என சொல்லப்படும் கிரிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாளான நேற்று அவருக்கு Tribute செய்யும் விதமாக கால்பந்து விளையாடியுள்ளார் தல அஜித். மகன் வயது குழந்தையுடன் அஜித் விளையாடிய இந்த Football புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?