பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை.. திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் : விற்பனை கடைகளை மூடி வியாபாரிகள் எஸ்கேப்!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 7:49 pm

பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை.. திடீர் ஆய்வு நடத்திய அதிகாரிகள் : விற்பனை கடைகளை மூடி வியாபாரிகள் எஸ்கேப்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்தம் காலாவதி தேதி முடிந்தும் விற்பனை செய்யப்படுவதாகவும் கோவில் சார்பில் விற்கப்படும் லட்டு அதிரசம் முறுக்கு போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதால் பூசனம் பிடித்து எண்ணெய் சிக்கு வாடை அடித்தும் இருந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையில் 7-க்கும் மேற்பட்டோர் பஞ்சாமிரத் தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு சில பிரசாதங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்று முடிவு இன்னும் வரவில்லை.

கோவில் நிர்வாகம் அறங்காவலர் குழு சார்பில் செய்தியாளர் சந்திப்பின் போது கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டு இருந்த தேதியை 15 நாட்களில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம் என்றும் , அதேபோல லட்டு முறுக்கு அதிரசம் ஆகிய பிராசதங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி விரைவில் குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செல்லதுரை ஆய்வு செய்து வருகிறார்,

திடிரென மின் இழுவை ரயில் நிலையம் ,பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள பஞ்சாமிர்தம் கடைகள் ஏன் அடைக்கப்பட்டுள்ளது என பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?