குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி… கங்கையில் புனித நீராடச் சென்ற போது நிகழ்ந்த சோகம்…!!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 4:29 pm

உத்தரபிரதேசத்தில் கங்கையில் புனித நீராடச் சென்ற போது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று சாலையோரத்தில் இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!