இந்த புகைப்படத்தில் கியூட் சிரிப்புடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இப்ப இவங்க ஃபேமஸ் நடிகை..!

Author: Vignesh
8 March 2024, 10:56 am

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், திருமணம் குழந்தை என செட்டில் ஆகியும் சில நடிகைகளை ரசிகர்கள் மறப்பதே இல்லை. அப்படி தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்து இப்போதும் ஒரு நடிகை மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் ஒரு கட்டத்தில் மார்க்கெட் கொஞ்சம் குறைய அவர் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

இருந்தாலும், இன்ஸ்டாவில், அவரது புகைப்படங்களை பதிவிட்டதும் கிடையாது. குடும்ப புகைகளில் புகைப்படங்களையும் வெளியிட மாட்டார். ஆனால், ஒவ்வொரு வருடமும் தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மட்டுமே பதிவிடுவார். அது வேறு யாருமில்லை நடிகை அசின் தான். அவரது சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?