சாலையோரம் தாயுடன் படுத்திருந்த 4 மாதக் குழந்தை கடத்தல்… 10 தனிப்படைகள் அமைப்பு… சிசிடிவி காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டை..!!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 7:55 pm

தூத்துக்குடியில் சாலையோரம் தாயுடன் படுத்திருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்த சந்தியா என்ற தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தையை மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடியில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க 10 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…