சு.வெங்கடேசனுக்காக வாக்கு சேகரிப்பு.. வைகை ஆற்றில் மலர் தூவி பரப்புரை செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 10:25 am

சு.வெங்கடேசனுக்காக வாக்கு சேகரிப்பு.. வைகை ஆற்றில் மலர் தூவி பரப்புரை செய்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடக்கூடிய நிலையில் இன்று மதுரை கல்பாலம் பகுதியில் இருக்கக்கூடிய வைகை நதியில் அமைச்சர் பி டி ஆர் அவர்கள் வைகை ஆற்றில் மலர் தூவி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கல்பாலம் சாலை வழியாக சிம்மக்கல் நோக்கி வாக்குகள் சேகரித்து சென்ற வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்

தொடர்ந்து கல்பாலம் சாலை வழியாக சிம்மக்கல் பகுதிக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்

மேடையில் அவர் பேசுகையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மத்திய தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் மதுரை மத்திய தொகுதியில் திமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது

எனவே இந்த ஆண்டும் கூடுதலாக சென்ற தேர்தலில் 10% வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மையம் நம்மோடு இணைந்து இருக்கிறது. 2016, 2019, 2021, 2022 இல் செய்த சாதனைகளை இந்த ஆண்டு அதையும் தாண்டி மீண்டும் ஒரு சாதனையை செய்ய வேண்டும்

இது சாதாரண தேர்தல் அல்ல ஏற்கனவே ஒரு தலைமுறையினருடைய எதிர்காலத்தை சீர்குலைக்கும் உண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது

இன்னொரு முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஜனநாயகம் எல்லாம் நீடிக்குமா என்ற அச்சம் வரக்கூடிய நிலையில், இது போன்ற ஒரு சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டிய பணி நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்

நாடு முழுவதும் மக்கள் விழிப்புணர்வோடு அதை செய்வார்கள் என்ற நம்பி நாட்டின் எதிர்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய பணியை சிறப்பாக செய்வோம். உங்கள் அனைவருக்கும் வெற்றிக்காக இன்று எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்

தொடர்ந்து வேட்பாளர் வெங்கடேசன் அவர்கள் பேசுகையில் , தமிழர்களின் நாகரிகம் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய வைகை கரை நாகரீகம் பிறந்த வைகை நதியை வணங்கி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றோம்

கடந்த கால சாதனைகளை சொல்லி செய்யப் போகின்ற திட்டங்களை சொல்லி நாங்கள் வாக்குகள் சேகரிக்க உள்ளோம் என்றார். தொடர்ந்து தைக்கால் தெரு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்

அதன் பின்னர் எல்என்பி அக்ரஹாரம் பகுதியில் பிரச்சார வாகனத்தில் அமைச்சர் பி டி ஆர் ஆகியோருடன் இணைந்து வேட்பாளர் வெங்கடேசன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்

இந்த தேர்தல் பிரச்சார தொடக்க விழாவில் மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ,மதுரை வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி ,மதுரை மேயர் இந்திராணி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!