அண்ணாமலை என்ன பெரிய ஞானியா..? ஜெயிலே எங்களுக்காகத் தான் கட்டி வச்சிருக்காங்க… செல்லூர் ராஜு நக்கல்…!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 4:06 pm

செல்போனில் பேசுவதை எடுக்க முடிந்த அண்ணாமலைக்கு ஏன் மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேதாஜி ரோடு, நகைக்கடை பஜார், காஜிமார்க் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரைகள் கொண்டார்.

மேலும் படிக்க: சிறுமி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… பிறந்தநாள் விழாவில் நடந்தது என்ன? பெற்றோர்கள் சந்தேகம்!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- அண்ணாமலை தற்போது ஆர்டிஐ தகவல் உள்ளது என கூறுகிறார். எல்லாம் தெரிந்த மேதாவி என கூறும் அண்ணாமலை. 20 ஆயிரம் புத்தகங்கள் படித்ததாக கூறுகிறார். இந்த புத்தகங்களை ஏன் படிக்கவில்லை. தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்பட்டும் பாதிப்பை ஏன் இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தார்.

இதற்கு ஆர்டிஐ தகவல் தேவையா..? செல்போனில் பேசுவதை எடுக்க முடிந்த அண்ணாமலைக்கு ஏன் மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே. தற்போது மீனவரிடம் வாக்குகள் சேகரிப்பதற்காக இதுபோன்ற நாடகமாடுகிறார். எந்த வண்டி டெல்லிக்குப் போகும் எந்த வண்டி போகாது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அண்ணாமலை என்ன நானியா..?

மேலும் படிக்க: கச்சத்தீவு தாரைவார்த்த விவகாரம்.. கருணாநிதி உள்பட 3 பேர் மட்டுமே ; அண்ணாமலை சொன்ன ரகசியம்…!!!

அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது தொடர்பாக கேள்விக்கு.? ஜெயிலே எங்களுக்கு கட்டப்பட்டது தான். வெள்ளக்காரனே வாய் பூட்டு சட்டம் கொண்டு வந்தது எங்களுக்காக தான். மதுரை ஜாம்பவானாக இருந்த “அனா- வை அழகிரியை” எதிர்த்தே அரசியல் பண்ணவன். மீனாட்சி சுந்தரேஸ்வரரை விட தனக்கு தான் செல்வாக்கு என திமுக துதி பாடியது. அவர்களே பார்த்தவங்க பனங்காட்டு நரி அதெல்லாம் சுஜிபி.. என்றார்

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!