இனி தப்பவே முடியாது.. குற்றவாளிகள் மீது அடுத்தடுத்து பாய்ந்த குண்டாஸ் : கோவை காவல்துறை அதிரடி ACTION!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2024, 8:24 pm

இனி தப்பவே முடியாது.. குற்றவாளிகள் மீது அடுத்தடுத்து பாய்ந்த குண்டாஸ் : கோவை காவல்துறை அதிரடி ACTION!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி நபர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டும், பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்டு வந்த குற்றத்திற்காக மோகன் குமார் @ மொக்கை மோகன் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகளான மோகன் குமார் @ மொக்கைமோகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

அதே போல கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் அடி, தடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி @ மணிகண்டன் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

மேலும் படிக்க: கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ.. 2 கிராம மக்கள் அவதி : புகை மண்டலத்தில் சிக்கிய TOURIST!

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 22 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?