வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்.. சிபிஐ உதவியை நாடிய SIT!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 9:47 pm

வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம்.. சிபிஐ உதவியை நாடிய SIT!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஹசன் தொகுதி எம்.பி., இவரது தந்தை ரேவண்ணா ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., எம்.எல்.ஏ., சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

பிரஜ்வலும், அவரது தந்தை ரேவண்ணாவும் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர்களது வீட்டு வேலைக்கார பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடன் வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆபாச வீடியோ புகார் எழுந்த நிலையில் பிரஜ்வல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

எஸ்ஐடி குழுவினர் சம்மன் அனுப்பியும் அவர் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில், பிரஜ்வலை கைது செய்ய வெளிநாடுகளின் உதவியை நாடும்படி, சி.பி.ஐ.,க்கு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!