தேர்தல் முடிவுக்கு பின் எல்லாமே மாறும்.. ஆட்சியும் மாறும்.. அதிமுகவில் காட்சியும் மாறும் ; அமைச்சர் ரகுபதி கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 2:22 pm

தேர்தல் முடிவுக்கு பின் எல்லாமே மாறும்.. ஆட்சியும் மாறும்.. அதிமுகவில் காட்சியும் மாறும் ; அமைச்சர் ரகுபதி கணிப்பு!

புதுக்கோட்டை அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக கஜ்ரிவால் இருப்பதால் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது

மேலும் படிக்க: வெளுத்து வாங்கப் போகும் மழை.. 5 மாவட்ட மக்களே கவனமா இருங்க ; வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடியின் பேச்சிலிருந்தே பாஜக 2024 தேர்தலில் தோல்வி அடைவது நிச்சயம் என்று தெரியவந்துள்ளது அதை நிரூபிக்கும் விதமாக தான் பிரதமர் மோடியின் பேச்சு உள்ளது.

அவருடைய பேச்சு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக தான் உள்ளது. குஜராத்தில் கூட பத்து இடங்களில் பாஜக பிடிப்பது என்பது அரிதாக தான் இருக்கும்

சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் அப்போதுதான் சரியான எதிர்க்கட்சி இருக்கும்

அதை விடுத்து வேறுவிதமான விமர்சனங்களை வைத்தால் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படும் கூடிய சூழ்நிலை ஏற்படும்

இருப்பினும் அரசியல் நாகரிகம் கருதி அவருக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தலைமை செங்கோட்டையன் தலைமையில் போகப் போகிறதா வேலுமணி தலைமையில் போகப் போகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
அதிமுகவில் தேர்தல் முடிவுக்கு பிறகு மிகப் பெரிய பிளவு உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது

சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை காண ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது ஏற்கனவே அனைத்து கோர்ஸ்களும் இங்கு உள்ளன புதிதாக ஏதாவது கோர்ஸ் தேவைப்பட்டால் அதை உருவாக்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 திமுக வின் வெற்றி திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிந்து நான்காவது ஆண்ட தொடக்க விழாவிற்கான பரிசாக இருக்கும் என்றார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!