சவுக்கு சங்கருக்கு 2 நாள்… ரெட் பிக்ஸ் ஃபெலிக்ஸுக்கு ஒரு நாள் ; நீதிமன்றம் போட்ட அடுத்தடுத்த அதிரடி உத்தரவு…!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 4:15 pm

சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை 7 காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க: சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… சிறுமியை துரத்திய தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

அப்போது, சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலசெல்வன் உத்தரவிட்டார்.

மேலும், காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த நிலையில், பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துசெல்லப்பட்டார்.

இதனிடையே, சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த நெறியாளர் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு திருச்சி மகிளா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நாளை மதியம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!