HEAT STROKE பாதிப்பு.. ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 9:25 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 போட்டியைக் காண பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் சென்றார்.

போட்டி முடிந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க: தோழமை உணர்வை நிலைநிறுத்துங்க.. தடுப்பணை கட்டும் பணி : கேரள முதலமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்!

வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதற்கிடையே, நடிகர் ஷாருக்கான் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது மேனேஜர் பூஜா தத்லானி, ஷாருக்கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி என்றார்.

இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

  • vijay character name in jana nayagan leaked in internet ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?