காருண்யா பல்கலை.,யை மேம்படுத்தும் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தம் ; CONSTRONICS INFRA LIMITEDக்கு ஒதுக்கீடு

Author: Babu Lakshmanan
25 May 2024, 3:54 pm

காருண்யா பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடிக்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகள் CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தல் பிரபல கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக CONSTRONICS INFRA LIMITED நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமாக பெற்று, சிறந்த முறையில் பணிகளை செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாக, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் தேதிக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து கொடுத்து வருகிறது.

மேலும் படிக்க: ஜெயலலிதாவைப் பற்றி என்ன தெரியும்..? மதவாதத் தலைவர் போல் சித்தரிப்பதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!!

அந்த வகையில், கோவையில் பிரபலமான காருண்யா கல்வி நிறுவனத்தில் சுமார் ரூ.4.64 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை CONSTRONICS INFRA LIMITED எடுத்துள்ளது.

அதன்படி, சாலைப் பணிகள், ஓடை இணைப்பின் குறுக்கே உயர்நிலை RCC பாலம், RCC RETAINING WALLS, PCC RETAINING WALLS உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், வேலைதொடங்கியதில் இருந்து 210 நாட்களில் இந்தப் பணிகளை முடித்துக் கொடுப்பதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!