ராஜினாமா செய்த பிரதமர் மோடி.. அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதியிடம் கடிதம் அளித்தார்..!

Author: Vignesh
5 June 2024, 2:20 pm

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க: தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று காத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் மக்களவை கலைப்பது குறித்து அமைச்சரவை தீர்மானத்தையும் அளித்துள்ளார்.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?