தப்பா பேசாதீங்க… அமித்ஷா சொன்னது என்ன தெரியுமா? X தளத்தில் தமிழிசை விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 10:46 am

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொன்டு இருந்தார்கள்.

அப்போது மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கொண்டு இருந்த சமயத்தில் அமித் ஷா அவரை கூப்பிட்டு எதோ பேசினார்.
சற்று கோபத்துடன் அமித் ஷா பேசுவதாகவும் தெரிந்தது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்த நிலையில், பலரும் அமித் ஷா தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்ததாக கூறதொடங்கி விட்டனர்.

மேலும் ஒரு பெண்ணை மேடையில் அவமதித்தற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என கருத்து பரவலாக எழுந்தது. இது தொடர்பாக தமிழிசையும் ஊடகத்திடம் விளக்கம் அளிக்கவில்லை.

இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அமித் ஷா என்னை மேடையில் இருக்கும்போது அழைத்து தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கேட்டார்.

இதனை பற்றி நான் அவரிடம் விரிவாகக் பேசினேன். அப்போது நேரமின்மை காரணமாக, மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளைத் தீவிரமாக செய்யுமாறு என்னை அறிவுறுத்தினார்.

தேவையற்ற வதந்திகள் பரவுவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!