ஷாலினிக்கு என்ன ஆச்சு; படப்பிடிப்பை நிறுத்திய அஜித்

Author: Sudha
3 July 2024, 6:52 pm

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ தம்பதிகள் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தன்னுடைய காதலை பற்றி பல பேட்டிகளிலும் அஜித் குறிப்பிட்டிருப்பார்

தல அஜித் இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பின் இடையில் சென்னை திரும்பினார் அஜித்.

ரசிகர்கள் அப்டேட் கிடைக்க காத்திருந்தனர். இந்நிலையில் அஜித் தன்னுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி
பகிர்ந்துள்ளார். ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலே தன்னுடைய படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அஜித் சென்னை திரும்பினார் என்பது தெரிய வருகிறது. இந்த புகைப்படம் இப்போது நிட்டிசன்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!