புகார் கொடுத்த பெண்ணை திட்டிய எஸ்ஐ.. ஏடிஎஸ்பியிடம் நேரடி புகார் : அழுத எஸ்ஐ.. மக்கள் குறைதீர் முகாமில் சுவாரஸ்யம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 4:56 pm

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் மற்றும் புதிய புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ள இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சிறப்பு குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது

இதில் காட்பாடி சப் டிவிஷனில் நடைபெற்ற குறைத்தேர்வு முகாம் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் லத்தேரி அடுத்த செஞ்சி வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி சித்ரா ஒரு புகார் மனு அளித்தார் அவர் அளித்த மனுவில் தனது கணவர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர் தானும் தனது கணவரும் தனியாக எந்தவித ஆதரவும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தன் வீட்டின் முன்பு அவருக்கு சொந்தமான இடத்தில் தேங்காய் மட்டைகளை அடுக்கி வைத்திருந்ததாகவும் அதை அருகில் உள்ள ராமச்சந்திரன் அவரது மனைவி பிரேமா ஆகியோர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேங்காய் மட்டைகளை எட்டி உதைத்து கீழே தள்ளியும் சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளதாக கடந்த 28/4/2024 அன்று அருகில் உள்ள பனமடங்கி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும் ஆனால் அளித்த புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் தற்பொழுது எடுக்கவில்லை எனவும் மேலும் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் தண்டபாணி ஏண்டா 4 அடி இடம் விட்டா நீ செத்தா போயிடுவே என தங்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் மேலும் மனு மீதும் சம்பந்தப்பட்ட எஸ்எஸ்ஐ மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தார்

மனுவை பெற்றுக் கொண்ட ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் சம்பந்தப்பட்ட சிறப்பு உதவியாளர் தண்டபாணி அழைத்து விசாரணை மேற்கொண்டார் அப்பொழுது சித்ரா இவர்தான் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி மிகுந்த மன உளைச்சதை ஏற்படுத்துகிறார் என இவர்கள் புகார் கூற பதிலுக்கு சிறப்பு உதவியாளர் தண்டபாணி எனக்கு தற்பொழுது தான் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது நானும் மனிதன் தான் நான் ஏன் அப்படி பேசப் போகிறேன் என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் ஏடிஎஸ்பி முன்னிலையிலே இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் நீ இந்த மனுவை விசாரிக்க வேண்டாம் நான் வேறு ஒருவரை விசாரிக்கச் சொல்கிறேன் நீ முதலில் கிளம்பு எனக் கூறினார்

இது போன்ற ஒரு சுவாரசிய சம்பவத்தால் அங்கு நகைச்சுவை கலந்த பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காட்பாடி சப்-டிவிஷனில் உள்ள பல காவல் நிலையங்களில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைத்திடும் முகாமில் பல்வேறு வழக்குகள் புகார் பெற்றும் இன்னும் விசாரிக்க கூடவில்லை என்பதும் அங்கு வந்த மக்கள் புலம்பியதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?