அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறிவிட்டது : ஜெயக்குமார் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 11:29 am

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள அழகு முத்துகோன் அவரது திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் அவரது திருவுருவச் சிலை மற்றும் கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் ஜெயகுமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகேன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது, மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

வெள்ளையனுக்கு அடிப்படையாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்து கோன் அவர்கள் தான்.அழகு முத்து கோன் அவர்களை சிறை பிடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி, தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிகொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையை போனாலும் சரி காட்டிக் கொடுக்கக்காமல் அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் என கூறினார், அவர் அந்த அளவுக்கு உறுதியோடு இருந்தார்.

வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தார். கட்சியில் ஒன்று சேர்வது உண்மைத் தன்மை இல்லை என கூறினார்.
ஓபிஎஸ் அவர்கள் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார்.
ஓபிஎஸ் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தட்டா கிடையாது. TTV இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது.

பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம் என தெரிவித்தார்.

கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது, சசிகலா குறித்த கேள்விக்கு, கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கட்சி இணைக்க முடியும் அது முழு சோற்றில் பூசணிக்காயை மறைப்பதற்கு சமம் என பதில் அளித்தார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்தது தான் 90 சதவீதம் இணைப்பு என்று அவர் கூறுகிறார் என தெரிவித்தார். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை எனவும் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்சனை இல்லை முதலமைச்சர் மு க ஸ்டாலினை மாற்றினால் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும். விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது.மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டி உள்ளார்.

அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என கூறினார்.
லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார், லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல, இன்று சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்கள் லுங்கி அணிகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள் எனவே அது அவ மரியாதைக்குறிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன் என தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!