சர்ப்ரைஸ் ரெடி; விடாமுயற்சியில் அஜித் ரசிகர்களுக்கு; அப்டேட் பாருங்க பாஸ்,..

Author: Sudha
17 July 2024, 11:58 am

ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கரதெல்லாம் தலைக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும், நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக் மற்றும் Second லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் ஆரவ் சென்ற கார் விபத்துக்குள்ளான வீடியோவும் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் பதரிப்போய் “பாத்து தல” என்று அனுதாபம் தெரிவித்து வந்தனர். இந்த வீடியோவும் படத்திற்கான எதிர்பார்ப்பை எதிர வைத்தது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கும் நடிகர் ஜீவா ரவி அளித்த பேட்டி ஒன்றில், விடாமுயற்சி படத்தில் அஜித் இளமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “விடாமுயற்சி படத்தில் கடந்த டிசம்பர் மாதம் நான் கமிட் ஆனேன். இயக்குனர் மகிழ் திருமேனி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய முதல் படம் தடையறத் தாக்க படத்தில் இருந்து நான் அவருடன் பயணிக்கிறேன்.விடாமுயற்சி படத்தில் நான் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளேன். இப்படத்தில் அஜித் இளமையான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இளமையான அஜித்தை பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகப் போவது உறுதி.

எனக்கு இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு இருக்கிறது. அனைத்து நடிகர், நடிகைகளுடனும் எனக்கு காட்சி இருக்கிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து அப்டேட் கொடுக்கிறேன்” என செம்ம பாஸிட்டிவ் ஆக பேசியுள்ளார்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!