தெறிக்க விட்டுட்டீங்களே தனுஷ்….. “ராயன்” பார்த்து மெர்சலான மகேஷ் பாபு!

Author:
30 July 2024, 11:13 am

தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் ராயன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பட்டய கிளப்பி வருகிறது.

சன் பிக்சர் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்திப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

” ராயன் ” திரைப்படம் தனுஷின் கெரியரிலே மிக முக்கிய பாடமாக அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் கொடுத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட வெறும் 4 நாட்களிலேயே ரூ. 80 கோடி அளவில் வசூல் சாதனை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது ராயன் திரைப்படம்.

இந்த நிலையில் ராயன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் செலிப்ரிட்டிகளும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு இந்த திரைப்படத்தை குறித்து பெருமையாக பேசி பதிவிட்டு இருக்கிறார்.அது அவர் கூறியிருப்பதாவது, ” ராயன்” தரமான சம்பவம். தனுஷ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயக்கம், நடிப்பு என இரண்டிலும் பின்னி பெடல் எடுத்துவிட்டார். மிகவும் புத்திசாலித்தனமாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , சந்தீப் கிஷன் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசை மிகவும் அழகாக இருந்தது, என படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவின் ஸ்டார் ஹீரோவான மகேஷ் பாபு எந்த ஒரு ஈகோவும் அல்லாமல் பாராட்டியிருப்பது வியப்பளிக்கிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!