முதலமைச்சர் போட்ட புதிர்: வலுத்துள்ளது ஆனால் பழுக்கவில்லை: துணை முதல்வரா உதயநிதி..?!

Author: Sudha
5 August 2024, 2:20 pm

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தி.மு.க தலைமை இதை உறுதிப் படுத்தவில்லை.

கடந்த மாதம் ஜூலை 20 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி பேசும்போது, துணை முதல்வர் பதவி குறித்து எல்லா பத்திரிகைகளிலும் கிசுகிசுக்கள் வருகின்றது. எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று பேசினார்.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம், ‛‛உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறதே ”என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த பதிலில் வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை எனக்கூறினார். முலமைச்சரின் இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?