மருமகளை ஆபாசமாக வர்ணித்த நாகார்ஜுனா…? வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 7:43 pm

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மாடல் அழகியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக இவர் 2013 “ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் 2013” பட்டத்தை பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த இராமன் ராகவ் 2.0 என்ற திரைப்படத்தில் நடித்த துலிபாலா திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .

அதை தொடர்ந்து அமேசான் வீடியோவில் நாடகத்தொடராக வெளிவந்த “மேட் இன் ஹெவன்” என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே துலிபாலா பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை ரகசியமாக காதலித்து மிகவும் எளிமையான முறையில் நாகார்ஜுனாவின் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

அதன் புகைப்படங்களை நாகார்ஜுனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது புதிய மருமகளை அறிமுகம் செய்து வைத்தார். நாகார்ஜுனா சோபிதா குறித்து சில மாதங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது, சோபிதா படங்களில் மிகவும் ஹாட்டாக காட்சியளிக்கிறார். அவருடைய நடிப்பு என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. அவரின் நடிப்பு திறமையை பார்த்து விழுந்தேன். அவருக்குள் இன்னும் பல திறமைகள் இருக்கிறது என பெருமையோடு பேசினார். இந்த வீடியோவை நெட்டிசன்ஸ் எல்லோரது கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?