கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை தாமதம்:கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும்:அதிரடி உத்தரவு….!!

Author: Sudha
19 August 2024, 4:28 pm

கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், கும்பகோணம் கோவில் குளங்கள், நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததில் இருந்து அவர் கலெக்டர் ஆக இருக்க தகுதியானவர் இல்லை என தெளிவாகிறது.

கும்பகோணம் கோவில் குளங்கள், அதற்கு நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்” இல்லையேல் அக்டோபர் 28ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!