ஆம்னி பேருந்துகளுக்கு குறி.. நோட்டமிட்டு திருடிய இளைஞர் : ஷாக் சிசிடிவி காட்சி..!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 1:59 pm

கோவை – பெங்களூர் செல்ல நாள்தோறும் இரவு நேரங்களில் அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சொகுசு பேருந்துகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் இருந்து கோவைக்கு படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது தேனீர் மற்றும் இயற்கை உபாதிகளுக்காக வரும் வழியில் பேருந்துகள் நின்று செல்லும் இரவு நேர உணவகங்களின் ஒன்றில் நின்ற பேருந்தில் இளைஞர் ஒருவர் ஏறி அங்கு பயணிகளின் படுக்கை அறைகளை ஒவ்வொன்றாக தேடுகிறார்.

அதில் ஒரு பயணியின் படுக்கையில் வைத்து இருந்த லேப்டாப் பேக்குகளை எடுத்து மாட்டிக் கொண்டு அந்தப் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும் காட்சிகள் அந்த பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த காட்சிகள் தற்போது வெளியாகி இரவு நேர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!