இல்லாத நிலத்திற்கு லோன்.. போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற முயற்சி செய்த 2 பேர் கைது..!

Author: Vignesh
28 August 2024, 11:12 am

திருச்சி அருகே விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த சிட்டா ஆவணங்கள் சரி பார்ப்பதற்காக வேளாண் கூட்டுறவு சங்கத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவற்றை சரிபார்த்த கிராம நிர்வாக அலுவலர் வந்த சிட்டா மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் இது தொடர்பாக ஜீயபுரம் காவல் இடத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் கொடுத்த பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!