ஒரே நாளில் வசூலை வாரி குவித்த G.O.A.T… எத்தனை கோடி தெரியுமா?

Author:
6 September 2024, 6:03 pm

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் விஜய்யின் 68வது திரைப்படமாக வெளியாகி உலகம் முழுக்க விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இப்படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி வைபவ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களையும் தாண்டி மறைந்த நடிகரான விஜயகாந்த் நடித்துள்ளது போல் ஏஏ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் படத்திற்கு சுவாரசியத்தை தூண்டியிருந்தது .

goat collections

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடையில் வெளியான இந்த திரைப்படம் கலமையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் ஒரே நாளில் ₹126.32 கோடி வசூல் செய்து அபார சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்